வாக்கு எந்திரங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருச்சி மாவட்டம் ,துறையூர் நகராட்சி அலுவலகத்தில் வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பான அறையில் மூடி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-03-25 12:13 GMT
வாக்கு பெட்டடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
வாக்குபெட்டிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி துறையூர் தொகுதியில் உள்ள சுமார் 279 வாக்கு சாவடிகளுக்கு தேவையான 334 வாக்கு எந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு துறையூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகர் தலைமையில் வட்டாட்சியர் வனஜா, தேர்தல் துணை வட்டாட்சியர் முத்து மற்றும் திமுக, அதிமுக ,தேமுதிக ,பாஜக உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் துறையூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு மூடி முத்திரையிட்டு சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாக்கு எந்திரங்கள் உள்ள அறைக்கு சுழற்சி முறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.