பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கிய காவல்துறையினர்!
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 270 பள்ளி மாணவ, மாணவியருக்கு வெள்ள நிவாரண பொருட்களை போலீஸ் அதிகாரிகள் சார்பில் வழங்கப்பட்டது.
Update: 2024-01-12 09:12 GMT
தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18 தேதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சரகம் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் ஆலோசனையின் பேரில், ஏர்வாடி காவல் ஆய்வாளர் மா.தர்மராஜ் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள கே.டி.கே கோசல்ராம் உயர்நிலை பள்ளியில் படிக்கும் 270 மாணவ மாணவிகளுக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். நிவாரணப் பொருட்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாஸ்கர் மான்சிங் மாணவ, மாணவியருக்கு வழங்கினார். இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சத்தியசங்கர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் நன்றியினை தெரிவித்தனர். பள்ளியின் தாளாளர் ராஜா, உதவி காவல் கண்காணிப்பாளர், எர்வாடி காவல் ஆய்வாளர் தர்மராஜ் ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக நன்றிகளை தெரிவித்தனர்.