தபால் வாக்கு செலுத்திய காவல் துறையினர்
சென்னை மத்திய அலுவலகத்தில் காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு செலுத்துவதை மாவட்டத் தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Update: 2024-04-11 10:30 GMT
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, இன்று (11.04.2024) சென்னை மாவட்டம், தேர்தல் நடத்தும் அலுவலர் (சென்னை மத்திய) அலுவலகத்தில் காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்கள் தபால் வாக்குப்பதிவினை செலுத்துவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.