புதுக்கோட்டையில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு!

புதுக்கோட்டையில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

Update: 2024-04-20 04:50 GMT

புதுக்கோட்டையில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.


பொன்னமராவதி/ கந்தர்வகோட்டை/விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொன்னமராவதி ஒன்றியத்தில் 107 வாக்குச்சாவடி மையங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களித்தனர். கண்டியாநத்தம் ஊராட்சியில் உள்ள 66ஆம் எண் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் சரிவர இயங்காததால், புதிய வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு, இரண்டு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளால் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர்.

மதிமுக வேட்பாள துரை வைகோ, அதிமுகவேட்பாளர் ப. கருப்பையா ஆகியோர் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டனர். வாக்குப்பதிவையொட்டி, வெளியூரில் வசிக்கும் இத்தொகுதிவாசிகள் வெள்ளிக்கிழமை ஊருக்கு வர பேருந்துகளில் இடம் கிடைக்காததால், பேருந்தின் மேற்கூரையின் மீது பயணித்து வந்தனர்.கரூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 65 நம் வாக்குச்சாவடியில்வெள்ளிக்கிழமை காலையில் முதல் வாக்கு அளிக்கும் போதே இயந்திரம் வாக்குப்பதிவை ஏற்றுக் கொள்ளாததால் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக தொடங்கியது.

Tags:    

Similar News