கழிவுநீர் வெளியேற்றம் -மின் இணைப்பை துண்டித்த மாசுகட்டுபாட்டு வாரியம்
பொதுமக்களின் புகாரை அடுத்து கழிவுநீரை வெளியேற்றிய ஆலையின் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதிகாரிகள் மின் மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டித்தனர்
Update: 2023-12-23 09:53 GMT
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன்.இந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 16 ம் தேதி சிப்காட்டில் செயல்படும் தனியார் டெக்ஸ்டைல்ஸ் இருந்து மறைமுகமாக அதிகளவு உப்புத்தன்மை கொண்ட கழிவுழீர் வெளியேற்றப்பட்டதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் ஆய்வில் அத்தொழிற்சாலையில் சுத்திரிகப்பு நிலையம் முறையாக செயல்படாமல் பல்வேறு குறைபாடுகள் உள்ளதை கண்டறிந்த அதிகாரிகள் இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது.அறிக்கையின் அடிப்படையில் முதற்கட்டமாக தனியார் டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட மின் மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டுள்ளதையடுத்து அதிகாரிகள் இன்று தொழிற்சாலைக்கு செல்லும் மின் மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டித்தனர்.