ஏற்றக்கோடு ஊராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா

திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஏற்றக்கோடு ஊராட்சி அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-16 03:28 GMT
பொங்கல் விழா
குமரி மேற்கு மாவட்டம், திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஏற்றக்கோடு ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.   திருவட்டார் தெற்கு ஒன்றிய தி மு க செயலாளர் ஜாண்பிரைட் தலைமை வகித்தார்.        நிகழ்ச்சியில் பொங்கலிட்டு சிறப்பித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் மவுண்டுமேரி மனோகரன், துணை செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ரமேஷ், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் லெனின், சசிகுமார், அருள் செல்வன், குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், வார்டு உறுப்பினர்கள் லிபின்,  தெரசம்மாள் மற்றும் கிளை கழக செயலாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News