பொன்னமராவதி பஸ் நிலையம் மேம்பாடு எம்பி ஆய்வு!
பொன்னமராவதி பஸ் நிலையத்தை எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
பொன்னமராவதி பஸ் நிலையத்தை எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்திருந்தார். அதன்படி பஸ் நிலையத்தில் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேரூ ராட்சி செயல் அலுவலர் கணேசன், பஸ் நிலையத்தை மேம்படுத்த அரசுக்கு கருத்து அனுப்பப்பட்டுள்ளது.
இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றார். பஸ் நிலையத்தில் உயர் கோபுரமின் விளக்கு, கழிப்பிடம் உள்ளிட்ட எந்த பணிக்கு நிதி தேவைப்பட்டாலும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்க தயாராக இருப்பதாக கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். போக் குவரத்து நெரிசல் மிக்க அண்ணாசாலை இருவழிப்பாதையாக மாற்ற நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வட்டார காங்கிரஸ் தலைவர் கிரிதரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், திமுக சமூக வலைதள பிரிவு தொகுதி அமைப்பாளர் ஆலவயல் முரளிசுப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.