கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க பூஜை
கடலூர் மாவட்டம், சேப்பாக்கம் ஊராட்சியில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க பூஜை நடைபெற்றது.
Update: 2024-01-24 07:52 GMT
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் ஏழுமலையின் பொது நிதியில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க கவுன்சிலர் ஏழுமலை முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை தீனதயாளன் பூமி பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தார். அப்போது ஊராட்சி செயலாளர் தங்க சரவணன், அரசு ஒப்பந்ததாரர் கண்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.