உலக நன்மைக்காக ஜோதி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு அண்ணாநகர் முத்து மாரியம்மன் கோயில் சார்பில் உலக நன்மை வேண்டி ஜோதி தரிசன யாத்திரை நடைபெற்றது.
வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் பாண்டு ரங்கன் ரகுமாயி கோயிலில் இருந்து மாம்பட்டு அண்ணாநகர் முத்துமாரி யம்மன் கோயிலுக்கு வஸ்திரங்கள் சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் தை மாதம் நடப்பது வழக்கம்.
அதன் படி சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், அதில் உலக நன்மை வேண்டிஇயற்கை சீற்றங்களில் ஏதும் மக்களை பாதிக்காத வகையிலும் அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழவும், தென்னாங்கூரில் இருந்து மாம்பட்டு கோயிலுக்கு பாத யாத்திரையாக ஜோதி தரிசன யாத்திரை நடந்தது.
கோயில் உபாசகர் லட்சுமணன் தலைமையில் ஜோதி ஏந்தியவாரு காஞ்சிப்பு ரம் சாலை கோட்டை மூலை, பழைய பஸ்நிலையம், பஜார் வீதி, தேரடி, திண்டிவனம்சாலை, சேத் துப்பட்டுசாலை வழியாக கோயில் வளாகத்தை அடைந்தது. இதில் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.