மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா

தேனி மாவட்டம், பெரியகுளம் திரௌபதி அம்மன் திருக்கோவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைப்பெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் திரளான பக்தரகள் பங்கேற்றனர்.

Update: 2024-03-09 05:54 GMT

பூக்குழி இறங்கும் விழா

தேனி மாவட்டம், பெரியகுளம் வராகநதியின் தென்கரையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு திரௌபதி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் வளாகம் முன்பு இருந்து கரகம் ஜோடிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து அங்கிருந்து கரகம் எடுத்து ஊரின் முக்கிய வீதி வழியாக உலா வந்து கோவிலின் முன் அமைக்கப்பட்ட பூக்குழியில் பக்தர்கள் இறங்கினர்.

மேலும் இக்கோவிலில் சிறப்பம்சமான மீனாட்சி அம்மன் கோவிலில் கரகம் ஜோடிக்கப்பட்டு பக்தர் கரகத்தை தலையில் வைத்தபடி கையில் கரகத்தை பிடிக்காமல் ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கி கோவில் வரை தலையில் உள்ள கரகத்தை கையில் தொடாமல் செல்வது சிறப்பம்சமாகும். இதில் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக பூக்குழி இறங்கினர். அதனைத் தொடர்ந்து திரௌபதி அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

மேலும் இதனைத் தொடர்ந்து ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனை நடைபெற்றது .இதில் தேனி, தாமரைக்குளம், அல்லிநகரம், வடுகபட்டி,தேவதானப்பட்டி பெரியகுளம் நகர் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட பூக்குழி இறங்கும் விழாவை கண்டுகளித்து அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News