பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்  : வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானம்

பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-06-28 05:55 GMT

 ஒன்றிய குழு கூட்டம் 

பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் உள்ள மன்ற கூட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) க.வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஞானேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் என.பி.மாரிமுத்து, வி.கண்ணியப்பன், பி.டில்லிகுமார், யமுனா ரமேஷ், கே.சுரேஷ்குமார், உமாமகேஸ்வரி சங்கர், பிரியாசெல்வம், ஜெயஸ்ரீ லோகநாதன், பத்மாவதி கண்ணன், சத்யபிரியா முரளிகிருஷ்ணன், சிவகாமி சுரேஷ், எம்.கண்ணன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News