பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்.
பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உலகத்தில் உள்ள மன்ற கூட்டத்தில் நடைபெற்றது.
பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உலகத்தில் உள்ள மன்ற கூட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) க.வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஞானேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, கண்ணியப்பன், டில்லிகுமார், யமுனா ரமேஷ், சுரேஷ்குமார், உமாமகேஸ்வரி சங்கர், பிரியாசெல்வம், ஜெயஸ்ரீ லோகநாதன், பத்மாவதி கண்ணன், சத்யபிரியா முரளிகிருஷ்ணன், சிவகாமி சுரேஷ், கௌதமன், கண்ணன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசியதாவது: மாரிமுத்து: கடந்த ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த தொகையை இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இதனால் எந்த பணியும் மேற்கொள்ள முடியவில்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக நிதியினை விடுவிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே எடுத்த பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்யபிரியா முரளி கிருஷ்ணன்: வெள்ளவேடு ஊராட்சியில் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே இதற்கு தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார். கௌதமன்: காட்டுப்பாக்கத்தில் உள்ள மின்சார எரிமேடை பழுதடைந்துள்ளது. எனவே உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து மின்சார எரிமேடையை சீரமைக்க வேண்டும். மேலும் கோடை காலம் தொடங்க உள்ளதால் குடிநீர் பிரச்சனை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதனைத் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.