மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குப்பதிவு 5ந்தேதி தொடங்குகிறது

மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குப்பதிவு 5ந்தேதி தொடங்கும் என தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-03 11:19 GMT

மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குப்பதிவு 5ந்தேதி தொடங்கும் என தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ஆணைய அனுமதியின் பேரில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு சென்று தபால் வாக்கு பதிவு செய்ய உதவி தேர்தல் அலுவலர்களால் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வாக்கு சேகரிக்கும் பணிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நாட்கள் நிர்வாகக் காரணங்களால் மாறுதல் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மற்றும் 6, 8-ந்தேதிகளில் வீட்டிற்கு சென்று வாக்கு பெற நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே 5 மற்றும் 6, 8-ந்தேதி ஆகிய 3 நாட்களில் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தகவல் அளிக்கப்பட்ட தேதியில் 12 -டி விண்ணப்பம் அளித்துள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரியில் இருக்க வேண்டும். கடமையை நிறைவேற்ற... அப்போது வீட்டிற்கு வரும் அலுவலர்களிடம், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தை காண்பித்து தபால் வாக்கு படிவம் பெற்று சுதந்திரமாக வாக்கு செலுத்தலாம். அதன்படி படிவம் 12 டி-ல் விருப்ப விண்ணப்பம் அளித்துள்ள அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி தேர்தல் கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்த தகவலை தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News