முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு - மீண்டும் வாய்ப்பு 

தபால் வாக்கு செலுத்த தவறிய முதியோர், மாற்றுத்திறனாளிகள் இன்று வாக்கு சேகரிக்கும் அலுவலர்களிடம் தங்கள் வாக்கை செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

Update: 2024-04-15 08:44 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்களிக்க 2546 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3982 பேரும்  விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர். இந்த வாக்காளர்கள் வீடுகளுக்கு ஏப்ரல் 8, 9, 10 தேதிகளில் சிறப்பு அலுவலர்கள் குழுக்கள் மூலம் அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டது. இந்த குழுக்கள் வருகையின் போது வாக்களிக்க தவறிய விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளர்கள், வாக்களிப்பதற்காக இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 15 (இன்று) வாக்கு சேகரிக்க அலுவலர்கள் குழு வருகை தர உள்ளது. எனவே வாக்கை செலுத்த தவறிய வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News