அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம்

தமிழகத்தில் நம்பிக்கை மையங்களை மூடும் மத்திய அரசின் முடிவை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.

Update: 2024-02-08 01:56 GMT

அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் 

தமிழகத்தில் நம்பிக்கை மையங்களை மூடும் மத்திய அரசின் முடிவை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி எச்.ஐ.வி தொற்றாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பழனிவேல் ராஜன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் இருந்து, அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட துணை தலைவர், தாமஸ் விக்டர் , மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் கரும்பாயிரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொரானா பெருந்தொற்று கடந்துள்ள நிலையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது .ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களை மூட ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசின் நல்வாழ்வுத்துறையின், மருத்துவ சேவைகளை, நோக்கங்களை சிதைக்கிற ஒன்றிய அரசின் தவறான போக்குகளுக்கு இடமளிக்க கூடாது. எனவே தமிழக முதலமைச்சர் ஏழை , எளிய மக்களின் நலன் கருதி நம்பிக்கை மையங்களை மூட மாட்டோம் என, தமிழக அரசு கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.என குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கை அட்டையை தமிழக முதல்வருக்கு, அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News