மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த பவுர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனமுருக வழிபட்டனர்.

Update: 2024-06-24 09:11 GMT

 அங்காள பரமேஸ்வரி அம்மன் 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் சுரேஷ் பூசாரி, அறங்காவலர்கள் மதியழகன் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி, கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் சங்கீதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News