யானை நடமாட்டத்தால் இரவு நேரங்களில் மின் நிறுத்தம்; மாணவர்கள் அவதி

யானை நடமாட்டத்தால் வத்தல்மலை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதால், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2024-03-16 05:02 GMT

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியேறிய ஒற்றை யானை, காரிமங்கலம், தர்மபுரி, தொப்பூர் வழியாக பொம்மிடிஅடுத்த முத்தம்பட்டி வனப்பகுதிக்கு வந்தது. இதையடுத்து வழியில் யானை மீது மின்சாரம் தாக்காமல் இருப்பதற்காக, முத்தம்பட்டி, சிக்கம் பட்டி, கொப்பக்கரை, மணிபுரம், மணலுார், கொண்டகரஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் மின் சப்ளை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வத்தல்மலை அடிவார பகுதிக்கு யானை இடம்பெயர்ந்தது. அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்துவருகின்றனர்.வத்தல் மலை அடிவாரத்தில் யானை இடம்பெயர்ந்தது. அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். வத்தல் மலை அடிவாரத்தில் உள்ள மயிலாப்பூரில் நேற்று யானை இருந்தது. இதனால் அந்த பகுதியிலும் சில்லாரஹள்ளி, சுங்கரஹள்ளி கிராமப் பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

தற்போது பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனால் தேர்வுக்கு தயாராகமுடியாமல், மாணவ மாணவிகள் அவதிப்படு கின்றனர். யானை வருகையால் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்

Tags:    

Similar News