விருத்தாசலத்தில் இன்று எந்தெந்த இடங்களில் மின்தடை

சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் விருத்தாசலம் துணை மின் நிலையத்தின் சில மின் விநியோக பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-13 01:52 GMT

மின்தடை (பைல் படம்)

விருத்தாசலம் மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் இன்று 13 ஆம் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக விருத்தாசலம் துணை மின் நிலையத்தின் தென்னக ரெயில்வே பீடருக்கு உள்பட்ட அருவி தெரு, கோ.பொன்னேரி - சேலம் புறவழிச்சாலை மற்றும் கடலூர் புறவழிச்சாலை பகுதிகள் மற்றும் குமாரமங்கலம் பீடருக்கு உட்பட்ட கோ.பொன்னேரி சேலம் - கட லூர் புறவழிச்சாலை பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை விருத்தாசலம் மின் வாரிய செயற் பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
Tags:    

Similar News