மின் பயனீட்டாளர்கள் குறை தீர் முகாம்
மின் பயனீட்டாளர்கள் குறை தீர் முகாம்
By : King 24x7 Website
Update: 2023-12-04 16:50 GMT
திண்டுக்கல் வடக்கு கோட்டத்தில் நாளை டிசம்பர் 5ஆம் தேதி மின் பயனீட்டாளர்களின் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. என செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மின்வாரிய செயற் பொறியாளர் வடக்கு கோட்ட அலுவலகத்தில் நாளை ( டிச.5ம்) தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளர்களின் குறை தீர்ப்பு முகாம், மேற்பார்வை பொறியாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் வடக்கு கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.