பறவைகள் கண்காணிப்பு பட்டறை குறித்து மாணவ மாணவிகளுக்கு செயல் விளக்கம்

பறவைகள் கண்காணிப்பு பட்டறை குறித்து மாணவ மாணவிகளுக்கு செயல் விளக்கத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் எடுத்துரைத்தார்;

Update: 2024-04-01 10:35 GMT

செயல் விளக்கம் அளித்த பேராசிரியர்

அருப்புக்கோட்டை சைவ பானு சத்திரியர் கல்லூரிவிலங்கியல் துறை சார்பாக பறவைகள் கண்காணிப்பு பட்டறை நடைபெற்றது.

இதில் கல்லூரி செயலர் கே. முத்து தினகரன் தலைமை தாங்கினார். விலங்கியல் துறை தலைவர் இணைபேராசிரியர் முனைவர் க. பகவதியப்பன் வரவேற்றார். முதல்வர் கே. செல்லத்தாய் முன்னிலையில் பறவைகள் கண்காணிப்பு பட்டறை துவங்கப்பட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரி, விலங்கியல் துறை உதவி பேராசிரியர் எம் .ராஜேஷ் விலங்கியல் துறை மாணவர்களுக்கு பறவைகளின் வகைகள், இருப்பிடம்,

பறவைகளின் கூடு, பறவைகளை எப்படி கண்காணிப்பது பற்றி நேரடியாக மாணவர்களை பறவைகள் இருக்கும் மரங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்று தெளிவாக விளக்கிக் கூறினார். இணைபேராசிரியர் முனைவர் எம். வனிதா, உதவி பேராசிரியர் க.ராமசுப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

மாணவர்கள் ஆர்வத்துடன் பறவை கண்காணிப்பு பட்டறையில் ஈடுபட்டு அதிகமான பறவைகளை கண்டு களித்து அதனுடைய வகையினங்களை பற்றி தெரிந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் உதவி பேராசிரியர் எம். ராஜேஷ் அவர்களுக்கு நன்றி கூறினர்.

Tags:    

Similar News