திருமறையூர் மறுரூப ஆலயத்தில் கலை பொருட்கள் செய்யும் பயிற்சி
திருமறையூர் மறுரூப ஆலயத்தில் கலை பொருட்கள் செய்யும் பயிற்சி தொடங்கியது.
Update: 2024-05-14 07:30 GMT
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள திருமறையூர் மறுரூப ஆலயத்தில் ஓவியம் மற்றும் கலைப் பொருட்கள் செய்யும் பயிற்சி கடந்த 11 ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது.. இப்ப பயிற்சியானது 5 நாட்கள் நடைபெறுகிறது. இப்பயிற்சியின் துவக்க விழா நடந்தது. சேகர தலைவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்து ஜெபித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், தேவதாஸ் சேகர செயலாளர் ஜான்சேகர் ,சேகர பொருளாளர் அகஸ்டின் ,சேகர கமிட்டி உறுப்பினர்கள் ஆசீர் துரைராஜ், ஜெகதீசன் மற்றும் பாக்யராஜ், செல்வின் ஆலய பாடகர் குழு தலைவர் ஜோயல், ஆலய பணியாளர் ஆபிரகாம் மற்றும் சபை மக்கள் பங்கு பெற்றனர். இப்பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெரியவர்கள் பயனடைந்து வருகின்றார்கள். இப்பயிற்சியில் பாட்டில் ஓவியம், துணி ஓவியம், பழைய செய்தித்தாள் கொண்டு உபயோகமான பொருட்கள் செய்தல் பனை ஓலை படங்கள் செய்தல், பூக்கள் தயாரித்தல் மற்றும் பழைய பயன்படாத பொருட்களைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியினை திருமறையூரைச் சார்ந்த ரோஸ்லின் மற்றும் மோசஸ் தம்பதியினர் வழங்கி வருகின்றனர். இப்பயிற்சியானது மே மாதம் 15 ம் தேதி வரை நடக்கிறது . இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மாணவ_ மாணவிகள் பங்கு பெற அழைக்கப்படுகிறார்கள். ஏற்பாடுகளை சேகர தலைவர் ஜான் சாமுவேல் மற்றும் சபை மக்கள் செய்துள்ளனர்.