அரியபெருமானூர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானுார் ஆத்மநாயகி உடனமர் ஆத்மஞான லிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;

Update: 2024-02-08 05:51 GMT

ஆத்மஞான லிங்கேஸ்வரர் 

அரியபெருமானுார் ஆத்மநாயகி உடனமர் ஆத்மஞான லிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சூரிய ஒளிக்கதிர் நேரடியாக சுவாமி மீது வீசும் அதிசயம் கொண்ட கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுார் ஆத்மநாயகி உடனமர் ஆத்மஞான லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. நால்வர் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்து, இறைவன், இறைவியை எழுந்தருளச் செய்தனர். சுவாமி மற்றும் நந்தியம்பெருமானுக்கு 16 வகை மங்கல திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News