விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
கள்ளகுறிச்சி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிப்பாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-03-23 10:44 GMT
பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் விசாலாட்சி சமேத விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நேற்று பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு 16 வகை மங்கல திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நெய்வேத்தியம் நடத்தி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று கள்ளக்குறிச்சி பகுதி அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.