சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.;

Update: 2024-05-06 06:27 GMT
பிரதோஷ வழிபாடு

சின்னசேலம் அடுத்த கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமி மற்றும் நந்தியம்பெருமானுக்கு 16 வகை மங்கல திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர். அதேபோல் சின்னசேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், மற்றும் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில்களிலும், பிரதோஷ வழிபாடு நடந்தது.

Advertisement

கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், கமலா நேரு தெரு மற்றும் நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர். வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், தண்டலை சுயம்புநாதேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர், ஆலத்துார் திருவாலீஸ்வரர், பல்லகச்சேரி ராமநாதீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

Similar News