மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு குவியும் பாராட்டு
திருச்சியில் நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மேலப்புலியூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
திருச்சியில் எஸ்.எப்.ஐ சார்பில் 2023 மாரத்தான் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்றது, இந்தியர்களாய் இணைவோம் மனித நேயம் காப்போம் என்ற வாசகத்தை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, இந்திய மாணவர் சங்கம் மாநில துணைத்தலைவர் சம்சீர் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். திருச்சி நீதிமன்ற வளாகம் அருகில் துவங்கி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் வரை ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினார்கள், இதில் பெரம்பலூர் ஒன்றியம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வன் கலந்து கொண்டு ஓடி வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழ் பரிசு மற்றும் கேடயத்தை பெற்றார். அவருக்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார், பரிசு பெற்ற மாற்றுதிறனாளி கலைசெல்வனுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாலை பெரம்பலூர் வந்த அவருக்கு சமூக ஆர்வலர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.