14 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; சர்ச் பாதிரியார் போக்சோவில் கைது!!
காஞ்சிபுரத்தில் தாயை இழந்து சர்ச் பாதுகாப்பில் விடப்பட்ட 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி பாதிரியார் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.;
By : King 24x7 Desk
Update: 2024-07-08 06:38 GMT
priest
காஞ்சிபுரத்தில் தாயை இழந்து சர்ச் பாதுகாப்பில் விடப்பட்ட 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி பாதிரியார் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சின்னக் காஞ்சிபுரத்தை சேர்ந்த அந்தச் சிறுமியின் தந்தை, அதே தேவாலயத்தில் தோட்டத் தொழிலாளியாக உள்ளதாக தெரிகிறது. மனைவி இறந்ததால் மகளை கவனித்துக் கொள்ள சிரமமாக இருந்ததால் தாம் வேலை செய்யும் சர்ச்சிலேயே மகளை தங்கவைத்ததாகவும், சில தினங்களுக்கு முன் சர்ச்சில் பாதிரியாராக உள்ள தேவ இரக்கம் என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. சிறுமி அழுதபடி ஓடியதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.