நரிமேட்டில் ஆரம்ப சுகாதார நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூதாட்டி தலையில் மேற்கூரை இடிந்து விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளர்.;

Update: 2024-05-03 16:53 GMT

காயமடைந்த மூதாட்டி

மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த வேல் முருகன் இவர் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்க்கிறார், இவருக்கு விமலா என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு வயது பெண் குழந்தையும் இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் இன்று விமலாவின் தாயார் போது மணி (57) மதுரை நரிமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பேத்தி இரண்டு மாத பெண் குழந்தை மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையுடன் தடுப்பூசி போடா அழைத்து வந்துள்ளார்.

Advertisement

அப்போது எதிர்பாராத விதமாக சுகாதார நிலையத்தின் மேற்கூரை இடிந்து போது மணி அம்மாவின் தலையில் விழுந்துள்ளது, இதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு தற்போது போதுமணியம்மாள் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,

இதில் அதிர்ஷ்டவசமாக இரண்டு மாத பெண் பெண் குழந்தையும் இரண்டு வயது பெண் குழந்தையும் காயம் ஏதுமின்றி தப்பித்துள்ளனர். தடுப்பூசி போடுவதற்காக தனது இரண்டு மாத பேத்தியுடன் வந்த மூதாட்டியின் தலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News