பிரதமர் கையால் தங்கப் பதக்கம்; மாணவர்களுக்கு குவியும் பராட்டுகள்

பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கையால் தங்கப் பதக்கம் பெற்ற கரூரை சேர்ந்த மாணவர்களுக்கு தாளாளர் செங்குட்டுவன் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-01-13 05:10 GMT

பிரதமர் கையால் தங்கப் பதக்கம் பெற்ற கல்லூரி மாணாக்கர்களை வாழ்த்திய கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா திருச்சியில் நடைபெற்றது. கரூர் அடுத்த புத்தாம்பூர் பகுதியில் செயல்படும் வள்ளுவர் கல்லுரி மாணவர்களுக்கு, திருச்சி பாரதிதாசன் பல்கலை கழக 38வது பட்டமளிப்பு விழாவில் தங்க பதக்கம் வழங்க தேர்வு செய்தது.

இதற்காக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பல்கலை கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான R.N.ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 125 உறுப்பு கல்லூரிகள் உள்ள பல்கலைகழக அளவில், வள்ளுவர் கல்லூரி மாணவர்கள் இளங்கலை வணிகவியல் மாணவி P.சதியப்ரியா மற்றும் இளங்கலை உணவு மேலாண்மை துறை மாணவர் S.ரகு ஆகியோர் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர்.

இவர்களுக்கு பிரதமர் மோடி தங்க பதக்கம் மற்றும் பட்டத்தை பெருமையுடன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தங்கப்பதக்கம் வென்ற மாணாக்கர்கள் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவனை நேற்று கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சந்தித்தனர். அப்போது, கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் பதக்கம் வென்ற மாணவ- மாணவியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பதக்கம் பெற்ற மாணாக்கர்கள், பிரதமர் கையால் பதக்கம் பெற்றது தங்கள் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றனர். இதற்க்கு உறுதுணையாக இருந்த வள்ளுவர் கல்லூரிக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News