முன்விரோதம் - பெண்ணை கொல்ல முயன்றவர் கைது

மயிலாடுதுறை அருகே திருவாலங்காட்டில் கோவில் விழாவிற்கு வந்திருந்த பெண்ணை முன்விரோதம் காரணமாக கொல்ல முயற்சித்த நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-05 01:45 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் கொக்கூரை சேர்ந்தவர் ரவி மனைவி சுமதி.  இவர் கணவர் இறந்த பிறகு திருவாலங்காட்டில் அவருக்கு சேர வேண்டிய சொத்தினை ஊர் முக்கியஸ்தர்கள்  பஞ்சாயத்து பேசி அதே பகுதியில் இருந்த அழகேசனிடமிருந்து பெற்று அளித்துள்ளனர்.  அழகேசன் இதனால் சுமதி மீது கோபத்தில் இருந்து வந்தார். தற்பொழுது திருவாலங்காட்டில் நடைபெற்ற  மாரியம்மன்  கோயிலில் நடந்த பால்குட திருவிழாவிற்கு சுமதி மற்றும் அவரது பேரன் இருவரும் சென்றிருந்தனர்.

Advertisement

இந்த நேரத்தில் திருவாலங்காட்டை சேர்ந்த அழகேசன் என்பவர் சுமதியை விரட்டி அடித்தும் உதைத்தும் கொல்ல முயற்சி செய்துள்ளார்,  தடுக்க வந்த சுமதியின் பேரன் அபினேஷ்வரனையும் அடித்துள்ளார், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அவர்களைக் காப்பாற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து சுமதியின் மகள் சுகுணா குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சுமதியை கொல்ல முயற்சித்த அழகேசனை குத்தாலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News