சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை - விசிக

செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என விசிக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-11-28 06:46 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், விசிகவின் வெம்பாக்கம் மையம் ஒன்றிய செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். தொகுதி துணைசெயலாளர் பாஸ்கரன், யுவராஜ், செல்வம்,மாறன் கோபி கண்ணன்,பன்னீ ர்செல்வம்,முரளி,முருக ன், அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட செயலாளர் இடி மின்னல் இனியவன், பழனி, முருகானந்தம், சங்கர், வளவன், வக்கீல் விநாயகம்,கலையரசன், சேகர்,கார்த்தி, ரமேஷ், சதீஷ், வள்ளியம்மாள், பூங்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவாதங்களில் பங்கேற்றனர். திருச்சியில் நடைபெறும் வெல்லும் ஜனநாயக மாநாட்டிற்கு 20 வாகனங்களில் பங்கேற்பது, கல்வெட்டுடன் கொடியேற்று விழா நடத்துவது, செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News