சிறையில் மு.மூ.க நிர்வாகி தற்கொலை முயற்சி

ஆபாச வீடியோவை காட்டி பணம் பறித்த வழக்கில் மயிலாடுதுறை கிளைசிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லி பிரகாஷ் சிறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறைத்துறை போலீசார் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Update: 2024-06-18 06:13 GMT

கில்லி பிரகாஷ் 

மயிலாடுதுறையை சேர்ந்த மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லி பிரகாஷ் என்பவர். காரைக்கால் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியான சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் மயிலாடுதுறை சேர்ந்த சுபாஷினி என்பவர் நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து கில்லி பிரகாஷ் மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி மயிலாடுதுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை கிளை சிறையில் கில்லி பிரகாஷ் அடைக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை காவல் நிலைய குற்றவியல் பட்டியலில் இடம்பெற்றுள்ள கில்லி பிரகாஷ் மீது கொலை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் மாவட்ட காவல கண்காணிப்பாளர் மீனா பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கில்லி பிரகாஷ்சை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இன்று அதிகாலை சிறையில் உள்ள ஜன்னலில் `தான் கட்டியிருந்த கைலியால் தூக்குபோட்டு கில்லி பிரகாஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

உடனடியாக சிறைத்துறை போலீசார் கில்லி பிரகாஷ்சை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். கில்லி பிரகாஷ்சை பார்க்க அவரது தம்பி முரளியை போலீசார் அனுமதிக்கவில்லை. கில்லி பிரகாஷ் தற்கொலை முயற்சிக்கு போலீசார்தான் காரணம் என குற்றம்சாட்டி கூச்சலிட்டு தான் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் முரளியின் தலையில் தண்ணீர் ஊற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News