லாரி மோதி தனியார் மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு
குழித்துறை சந்திப்பில் கனிமவள லாரி மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு.
Update: 2024-03-06 16:56 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கனிம வளம் ஏற்றி வரும் கனரக லாரிகளால் விபத்துக்களும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை யில் மார்த்தாண்டத்தில் குழித்துறையில் நோக்கி சென்று கொண்டிருந்த கனிம வளம் ஏற்றி வந்தடாரஸ் லாரி குழித்துறை சந்திப்பில் வந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தனியார் மருத்துவமனை ஊழியர் அஞ்சலோஸ் (60)உடல் நசுங்கி பலியானர். தொடர்ந்து உடலை மீட்ட களியக்காவிளை காவல் நிலைய போலிசார் உடல் கூர் ஆய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் தொடரும் விபத்துக்களால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.