சேலத்தில் தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
சேலத்தில் தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-29 13:17 GMT
மாணவர் சேர்க்கை
கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை, எளிய மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி மாவட்டத்தில் 329 தனியார் பள்ளிகளில் 318 பள்ளிகள் தகுதி பெற்று உள்ளன. இதில் மொத்தம் 4 ஆயிரத்து 26 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட வேண்டும். அதன்படி விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் தேர்வு குலுக்கல் முறையில் நடந்தது.
இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குலுக்கல் இல்லாத 11 பள்ளிகளில் 147 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.