தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார்.;
Update: 2024-02-18 07:29 GMT
பணி நியமன ஆணை
திருவாரூர் மாவட்டம் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் . இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.