யூசு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல் !!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து உணவுகளை கொடுத்து அவர்களை ஆரோக்கியமானவர்களாக வளர்க்க வேண்டும் என பட்டேல் ஹாக்கி சங்க செயலாளர் ஞான குருப் பேசினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-03 06:50 GMT
பரிசு வழங்கல்
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து உணவுகளை கொடுத்து அவர்களை ஆரோக்கியமானவர்களாக வளர்க்க வேண்டும் என பட்டேல் ஹாக்கி சங்க செயலாளர் ஞான குருப் பேசினார். யூசு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு பரிசு வழங்கல், சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில்மாவட்ட யூசு சங்க பொருளாளர் கவிதா வரவேற்றார். தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார் .துணைத் தலைவர் கௌதம், பட்டேல் ஹாக்கி சங்க செயலாளர், மனிதநேய அறக்கட்டளை தலைவர் ஞானகுரு, பிட்னஸ் கோச் டெஃபி பிட்னஸ் கப் உரிமையாளர் டெஃபி குரு, யூசு சங்க செயலாளர் ஜாக்கி சங்கர், துணைத் தலைவர் கார்த்திக் குமார், துணைச் செயலாளர்கள் சாலமன் சேவியர் ,கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.