சர்வதேச கணினி அறிவியல் மாநாடு விழா

திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச கணினி அறிவியல் மாநாடு விழாவில் இஸ்ரோ,நாசா, விஞ்ஞானிகள் பங்கேற்பு.

Update: 2024-03-21 09:47 GMT

திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) –ன் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் உயராய்வு துறையின் சார்பாக இரண்டு நாட்கள் சர்வதேச கணினி அறிவியல் மாநாடு விவேகானந்தா கலைஅரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார். விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் குப்புசாமி , ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் பாலகுருநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் . பேபி ஷகிலா வரவேற்புரை வழங்கினார். கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறை தலைவர் முனைவர் க. ரமேக்ஷ் சர்வதேச கணினி அறிவியல் மாநாட்டின் மையக் கருப்பொருள் குறித்து எடுத்துரைத்து சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி அறிமுக உரையாற்றினார். சிறப்புவிருந்தினர்களாக மலேசியாவின் சர்வதேச மருத்துவ பல்கலைக்கழகத்திலிருந்து மூத்த பேராசிரியர் முனைவர். குணசேகரன் தங்கராசு அவர்கள், கோவையிலிருந்து சிஷீட் டெக் லேப் நிறுவனர் மற்றும் முதன்மை அதிகாரி திரு. மணிபாரதி கருணாகரன் அவர்கள், மைக்ரோசாஃப்ட் செர்ட்டிபோர்ட் பெருநிறுவன பயிற்சியாளர் திரு. ஹரிஹரசுதன் அவர்கள், சென்னையிலிருந்து ஹெச்.சி.எல் நிறுவனத்தின் இணை பொது மேலாளர் திரு. கேலப் ஆண்ட்ரூ அவர்கள், விழுப்புரத்திலிருந்து இ.எஸ். பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் அவர்கள், ப்ரீஸ்கேல் நிறுவனத்தின் நிறுவனர் திரு. பிரசாந்த் கணேக்ஷ் அவர்கள், வெப்சினித் சொல்யூக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணையதள வடிவமைப்பாளர் திரு.கௌரவ் சித்தார்த் ஆகியோர் முதல் நாளன்று சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டு தொழில்நுட்பம், இயந்திர வழி கற்றல், வேலைவாய்ப்புக்கான திறன், சைபர் கிரைம் விசாரணை, விவசாய நடைமுறையில் இணையத்தின் தாக்கம் குறித்தும் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு எவ்வாறு பொறியியல், வணிகம், சட்டம், கற்றல் மற்றும் கற்பித்தல், தொழில்துறை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். அதனை தொடர்ந்து இரண்டாம் நாளான்று அமெரிக்காவில் உள்ள நாசா (NASA) விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து முதன்மை ஆராய்ச்சியாளர் முனைவர். கஸ்தூரி வெங்கடேஸ்வரன் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் முனைவர். சசிகுமார் அவர்கள் கலந்து கொண்டு ஆழ்கடல் மற்றும் விண்வெளியில் நுண்ணுயிறிகளின் தாக்கம் குறித்து மிகவும் சிறப்பான முறையில் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் தமிழ்நாடு மற்றும் பிற நாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலிருந்து 170- க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவ மாணவிகள் தங்களுடை ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இவ்விழாவின் சிறப்பம்சமாக பாதாளம் முதல் ஆகாயம் வரை, தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் நுண்ணுயுறி என்னும் நண்பன், ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த பன்னாட்டு அறிவியல் கருத்தரங்க விழாவில் துணை முதல்வர் டாக்டர் மேனகா தேர்வணையாளர் டாக்டர் பத்மநாபன் துறைத்தலைவர் ,பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் உயராய்வு துறையின் பேராசிரியர் டாக்டர் வளர்மதி நன்றியுரை கூறினார்.

Tags:    

Similar News