தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை

இரைமன்துறையில் ரூபாய் 33.75 கோடியில் தூண்டில் வளைவு அலை தடுப்பு சுவர் அமைக்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்துள்ளார்.

Update: 2024-03-14 01:39 GMT

இரைமன்துறையில் ரூபாய் 33.75 கோடியில் தூண்டில் வளைவு அலை தடுப்பு சுவர் அமைக்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இரையுமன்துறை மீனவ கிராமத்தை கடலரிப்பில் இருந்து பாதுகாக்க தூண் டில் வளைவுடன் கூடிய அலை தடுப்பு சுவர் அமைக்கவேண்டும் என்று நான், தமிழ்நாடு முதல. மைச்சர் மு.க.ஸ்டாலின், மீன்வளம், மீனவர் நலத் துறை, கால்நடை பராம ரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந் தித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினேன்.

மேலும் சட்டமன்றத் தில் குரல் கொடுத்ததன் அடிப்படையிலும் கடந்த 2023 ஏப்ரல் 5ம் தேதி நடந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலன்துறை மானிய கோரிக் கையின் போது இரையுமன்துறை யில் ₹35 கோடியில் தூண்டில் வளைவு டன் கூடிய அலை தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்று அறிவிக் கப்பட்டது. இதையடுத்து நேற்று (11ம் தேதி) கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற் றும் மீனவர் நலன் துறை சார்பில் ₹33.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட் டுள்ளது. எனவே தூண்டில் வளைவுடன் கூடிய அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி விரைவில் தொடங் கப்படும். இவ்வாறு அறிக் கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

Tags:    

Similar News