தஞ்சாவூரில் பர்மா பஜார் கடைகளை அகற்ற எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டம்
தஞ்சாவூரில் பர்மா பஜார் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் பர்மா பஜார் கடைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் புதன்கிழமை இடிக்க வந்ததற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் பர்மா பஜாரிலுள்ள கடைகள் அழகி குளத்துக்கான நீர் வழித்தடமான ராணி வாய்க்காலில் இருப்பதாகவும், அதனால் கடைகளை காலி செய்து மாற்று இடத்தில் அமைத்துக் கொள்ளுமாறும் வியாபாரிகளிடம் மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வந்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இக்கடைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் இயந்திரம், மினி லாரியுடன் வந்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை அடைத்து திமுக கொடிகளுடன் பொக்லைன் இயந்திரத்தையும், மினி லாரியையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வியாபாரிகளிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலையை மறித்து நிறுத் தப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரமும், மினி லாரியும் அகற்றப்பட்டன. மேலும், நடவடிக்கையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பர்மா பஜார் வியா பாரிகள் தெரிவித்தது: இந்த இடத்தில் 36 ஆண்டுகளாக முறையாக வரி செலுத்தி கடைகளை நடத்தி வரு கிறோம். இந்நிலையில் இக்கடைகளைக் காலி செய்து தருமாறு மான கராட்சி ஆணையர் கூறினார்.
இது தொடர்பாக மாற்று இடம் கேட்ட போது, பீரங்கிமேடு பகுதியில் இடம் தருவதாகவும், அதற்கு தலா ரூ.2 லட்சம் முன் பணம் தர வேண்டும் என்றும், மாத வாடகை தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், நிரந்தர கட்டடமாக அல்லாமல், தற்காலிகமாக தகர சீட் அமைத்துக் கொள் ளுமாறும் மாநகராட்சி அலுவலர்கள் கூறினர். இதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது திடீரென முன் னறிவிப்பு இன்றி வந்து காலி செய்யுமாறு கூறுகின்றனர். எனவே, அண்ணா சிலை அருகில் உள்ள இடத்தில் ஒதுக்கீடு செய்து கொடுத்தால், நாங்கள் இந்த இடத்தைக் காலி செய்து, மாற்றிக் கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். அல்லது இதே இடத்தை கொடுத்து அதற்கு என்ன வாடகை நிர்ணயித்தாலும் நாங்கள் செலுத்துவதற்கு தயாராக உள்ளோம் என்றனர் வியாபாரிகள்.