பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாரதிய மஸ்தூர் சங்கத்தின் 4.வது மாநில மாநாட்டு தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முடிவின் படி அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 29ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற முதல் நிலையில் இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியக் கூடிய தின கூலி தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பணியின் போது விபத்துக்குள்ளான தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், மின் வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் தொழிலாளர்களின் இடம் மாறுதல் மற்றும் கோரிக்கயை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைமத்திய மாநில அரசுகளுக்கு முன்வைத்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மணிவேல் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட உரையாற்றினார் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில் குமார், செயல் தலைவர் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் தமிழரசன், அமைப்புச் செயலாளர் சிவன், செந்தில், அமுதா, கர்ணன், காசி விசுவநாதன், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சத்தியசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் .