சாலை பணியாளா்கள் மனு அனுப்பும் போராட்டம்

திருச்சி மாவட்டம், முசிறியில் சாலை பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துறை சாா் அலுவலா்களுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினா்.

Update: 2024-02-05 14:27 GMT

திருச்சி மாவட்டம், முசிறியில் சாலை பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துறை சாா் அலுவலா்களுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினா்.

முசிறி சாலை பணியாளா்கள் சங்க மாவட்ட தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ராமகிருஷ்ணன், முசிறி வட்டத் தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழக முதல்வா் பிரிவு, நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளா், சாலை பணியாளா் சங்கம் மாநிலத் தலைவா் மற்றும் தலைமை பொறியாளா் ஆகியோருக்கு, உயிரிழந்த சாலை பணியாளா்கள் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும், சீருடை சலவைப்படி, விபத்துப் படி மற்றும் சைக்கிள் படி வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முசிறி அஞ்சல் நிலையத்தில் இருந்து 50- க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா்கள் அனுப்பி வைத்தனா்.
Tags:    

Similar News