குஷ்பூ உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி செருப்பால் அடித்து போராட்டம்
மயிலாடுதுறையில் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவின் கொடும்பாவியை கொளுத்தி திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
Update: 2024-03-14 06:46 GMT
தமிழ்நாடு அரசின் சார்பில் பெண்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை தரக்குறைவாக விமர்சனம் செய்த பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ-க்கு தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணியினர் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் மயிலாடுதுறையில் இன்று குஷ்புவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி தலைமையில் மகாலட்சுமி உட்பட மகளிரணியினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, குஷ்பூவின் உருவ பொம்மையை துடைப்பம், செருப்பால் அடித்து அவமதித்து, தீயிட்டுக் கொளுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.