குவைத் சிறையில் உள்ள மீனவர்களை மீட்டு தர கோரி ஆர்ப்பாட்டம்

குவைத் சிறையில் உள்ள நான்கு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-03-15 08:37 GMT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக குவைத்தில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற இடத்தில் போதைப் பொருள் கடத்தியதாக பொய்யான வழக்கு போட்டு சிறையில் வாடும் அய்யர்(எ)சேசு, கார்த்திக், சந்துரு, வினோத் குமார் ஆகிய நான்கு மீனவர்களை உடனே மீட்டு தர கோரியும், சிறையில் வாடும் ஏழை மீனவர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். சிஐடியு நிர்வாகி செந்தில் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் அந்தோணி, சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி, கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்டத் தலைவர் கணேசன், திருப்பாலைக்குடி தமிழ் காளி, மோர்ப்பண்ணை இராஜதுரை, பாசிப்பட்டிணம் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News