அருவியை சுய உதவிக்குழுவிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம்
கொல்லிமலை மாசிலா அருவியை ஆடவர் சுய உதவி குழுவிடம் ஒப்படைக்க கோரி பழங்குடியின மக்கள், ஆடவர் சுய உதவி குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2023-10-18 14:31 GMT
சுய உதவி குழுவினர் ஆர்ப்பாட்டம்
சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்து கிழக்குவளவு பகுதியில் மாசிலா அருவி அமைந்துள்ளது. தற்போது இவ்வருவியில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் கொல்லிமலை யூனியன் சார்பில் கிழக்கு வளவு பகுதியை சேர்ந்த ஆடவர் சுய உதவி குழுவின் கட்டுப்பாட்டில் சுற்றுலா பயணிகளிடம் சுங்க வரி கட்டணம் வசூல் செய்து, மாசிலா அருவியின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது மாசிலா அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள், ஆடவர் சுய உதவி குழுவினர் மாசிலா அருவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாசிலா அருவி நுழைவாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.