தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக நீதி கேட்டு காத்திருப்பு பேராட்டம்

14 அமச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது

Update: 2023-12-08 04:36 GMT
வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீதி கேட்டு காத்திருப்பு பேராட்டம் - 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட துணைத்தலைவர் விவேகானந்தன் தலைமையில், கடந்த 1999ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபொழுது கலைஞர் அவர்கள் கிராம உதவியாளர் இறந்துவிட்டால் அவரின் குடும்பத்துக்கு கருணை அப்படையில் வாரிசு வேலை வழங்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது இருக்கும் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டதை கண்டித்தும், கடந்த 1-1-2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய முறையிலான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், மேலும் 24 மணி நேரம் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு கூலி, காலமுறை ஊதியம், மற்றும் தங்களை காலமுறை ஊதியமாகிய D பிரிவில் இணைக்க வேண்டும், மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு கொடுத்து வந்த எரிபொருள் படி ரூ 2500 நிறுத்தியதை திரும்ப தர வேண்டும்.

உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தர வலியுறுத்தி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் 30க்கு மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News