பேருந்துகள் அருப்புக்கோட்டையை புறக்கணித்தால் போராட்டம்
தொலைதூரப் பேருந்துகள் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என நல்லூர் வியாபாரிகள் சங்க பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மதுரை சாலையில் உள்ள தர்கா வளாகத்தில் நல்லூர் வியாபாரிகள் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் பரக்கத் முகைதீன் தலைமையில், செயலாளர் ராமர், துணை செயலாளர் நகர்மன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான், பொருளாளர் ஆசிக்அலி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவுகள் குறித்து வாசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், 26 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் E-3, சாலையை விரைந்து செயல்படுத்த வேண்டும், திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட தொலைதூர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக துணை தலைவர் சம்சுக்கனி நன்றியுரை உரையாற்றினார். இந்த கூட்டத்தில் வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.