நெல்லை முதல் கடையம் வரை பஸ் சீராக இயக்கவில்லை எனில் போராட்டம்
நெல்லை முதல் கடையம் வரை பஸ் சீராக இயக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை முதல் கடையம் வரையிலான, பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என்று தொடர் புகார்கள் வரும் நிலையில், இதனை சரி செய்யும் நோக்கில், அடுத்த கட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் நெல்லை முதல் கடையம் வரையிலான, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சரியான நேரங்களில் இயக்கப்படுவதில்லை.
பேருந்து நிறுத்தங்களில் முறையான கால அட்டவணை இல்லை. எனவே தற்போதைய கால அட்டவணையை அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் அமைக்க வேண்டும். கடையம் முதல் முக்கூடல் வரை புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். நெல்லை முதல் கடையம் வரை,
அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் நபர்களுக்காக, ஒன்டூஒன் அல்லது குளிர்சாதன பேருந்து இயக்க வேண்டும். கடையம் நகருக்கு பேருந்துகள் சரியான நேரத்தில் வந்து செல்வதை அறியவும் பேருந்துகளை பயணிகள் அறிந்து கொள்ளவும் நேரக் காப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். தென்காசி முதல் நெல்லைக்கு பேருந்துகள் கடையம், முக்கூடல் வழியாக இயக்க வேண்டும். பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒதுக்கப்ட்டுள்ள இடத்தை, நடத்துனர்கள் ஒதுக்கி தரவேண்டும் தீர்மானங்கள் மீது நெல்லை போக்குவரத்து பணிமனை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.