அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்கும் முடிவை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;

Update: 2024-02-01 10:12 GMT
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அலுவலகம் பொதுமக்கள் முற்றுகை

குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன. இதில் 25 ஊராட்சிகள், பேரூராட்சிகளுடன் இணைக்கப்படுவதாக தகவல் வெளியானது.  ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும்போது வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் என இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியிருந்தார். இருப்பினும் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Advertisement

இந்த நிலையில் இன்று காலை கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று 10 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.      

ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News