திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

Update: 2024-05-25 12:36 GMT

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்ற ராஜஸ்தான் மாநில தலைவர் ககன்தீப்சிங் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் நவீன் தலைமையில் நடைபெற்றது.

அனைத்திந்திய மாணவர் பெருமன்ற ராஜஸ்தான் மாநில தலைவர் ககன்சீப்சிங் மாநிலத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னிறுத்தி வெற்றி கண்டார். தொடர்ந்து மக்களுக்காக போராடிய மாணவர் தலைவரை படுகொலை செய்த சமூக விரோதிகளை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும். முன்கூட்டியே புகார் கொடுத்தும் கொலையை தடுக்க தவறிய ராஜஸ்தான் மாநில காவல்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் தர்ஷினி, இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் கோபி கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி கலந்து கொண்டார்‌. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரேசன், மாவட்ட துணை செயலாளர் நந்தி, முல்லை முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News