மதுரையில் வாக்காளர்களுக்கு ஒப்புகைசீட்டு வழங்க விசிகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 2024 தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க கோரி விசிகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2024-02-23 07:48 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 2024 தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க கோரி விசிகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


2024 தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க கோரி விசிக-வினர் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  திருவள்ளுவர் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும்,வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடி செய்வதற்கு பாஜக சதித்திட்டம் தீட்டி உள்ளது.

Advertisement

எனவே, இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த கோரி பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்குவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அரசபாண்டி,மேற்கு மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் முன்னிலையில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News