மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளை ஏமாற்றுவதால் தான் போராட்டம்

மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளை ஏமாற்றுவதால் தான் போராட்டம் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் முருகசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-06 12:27 GMT

  கரூர் மாவட்டம், ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரைத்தோட்டம் வரை 110 கேவி தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட மின் பாதை செல்லும் வழியில் அமைக்கப்பட்ட, மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீட்டை வழங்காததை கண்டித்து, கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா தலைமையில், அவரது தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனரும், வழக்கறிஞருமான ஈசன் முருகசாமி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் -ஐ அவரது அலுவலகத்தில் சன் நேரில் சந்தித்து மனு கொடுத்து பிரச்சினையை சுமூகமாக முடித்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளை ஏமாற்றுவதால் தான் இந்த போராட்டம் நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக மாவட்ட வருவாய் நிர்வாகம் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்துள்ளதாகவும், இன்று மாலை 3 மணி அளவில், இந்த குழு உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு வந்து இழப்பீடு தொடர்பாக பேசி முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News